கெத்து.. அதுதாங்க பலரை அப்படியே சாய்த்து விடுகிறது பல நேரங்களில். இப்படித்தான் கோலிவுட்டிலும் ஒரு இளம் நடிகர் பழைய கெத்துடா பேராண்டி கதையாக நடந்து வருவதால் பல தயாரிப்பாளர்களின் காதுகளில் புகையை வர வைத்துக் கொண்டிருக்கிறாராம்.
இவர் ஒரு காலத்தில் செம பிசியாக இருந்தவர்தான். தகிடுமுகிடாக நடித்து வந்தவரும் கூட. பெரிய பெரிய ஹீரோயின்ஸ் எல்லாம் இவர் கூட சேர்ந்து நடித்தனர். 2 முறை காதல் கசமுசாக்களிலும் சிக்கினார்.
ஆனால் இப்போது பெரும் சிக்கலில் இருக்கிறார். வரிசையாக இவர் நடித்து வராமல் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
"டெய்ல், ஹன்டிங் கிங், ஷீ இஸ் அவர் கேர்ள்" (என்னா ஒரு டிரான்ஸ்லேஷன் - கண்டு பிடிக்கவே முடியாது பாரு....!) ஆகிய படங்களில் இவர் நடித்தும், முடித்தும் கூட படம் எப்போ வரும் என்றே தெரியவில்லை. சிக்கலில் தொக்கி நிற்கின்றன. மேலும் 3 வருடங்களாக எந்தப் படமும் வரவில்லை. இருந்தாலும் நம்மவர் கெத்து குறையாமல்தான் இருக்கிறாராம்.
சமீபத்தில் கூட ஒரு தயாரிப்பாளர் போய் புதுப் படத்தில் புக் செய்வது குறித்துப் பேசியுள்ளார். அதற்கு சம்பளமாக சில கோடிகளைக் கேட்க தயாரிப்பாளர் லைட்டாக வந்த மயக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அப்புறம் வர்றேன் தம்பி என்று சொல்லி கம்பி நீட்டி விட்டாராம்.
இப்போது நடிகர் தனது விரல்களை மேலேயும் கீழேயும் மடக்கி சொடுக்கி சுருட்டி வித்தை காட்டி அதை அவரே ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ... வீட்டில்!
Post a Comment