ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

|

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் இறுதிக் காட்சியை கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் படமாக்கவிருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கதைக்கேற்ற சூழலும் இட அமைப்பும் ஷிமோகாவில் சரியாக இருப்பதால் அங்கு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

ஆகஸ்ட் 18-ந் தேதி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி ‘லிங்கா'வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் தயாரிக்கிறார்.

 

Post a Comment