சென்னை: தம்பி விஜய் பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே'ய'ரசு விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற ஆகஸ்ட் 14ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன்.
ஆகஸ்ட் 14ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவு கூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன்.
ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனிதமிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா - என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது.
செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைக்காமொபைல் நிறுவனத்தினர் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா?
கத்தி - என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, 'தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா' என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் - ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் - ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் - எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, 'இந்தப்படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது.
எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க முடியாது என்பதால்தான், லைக்கா மொபைல் - என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?
இன்று நீங்கள் லைக்கா மொபைலை அனுமதித்தால், நாளை - மகிந்த ராஜபக்சேவும் கோதபாய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்? 'இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா? என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள்.
கத்தி - திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் - என்பதே கூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம்.
கத்தி திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா - என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப் படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள். கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம்.
ராஜபக்சேவின் பினாமிகளோ - என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்பு பட்டால்கூட கத்தி படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனைப் பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின் போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்?
என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்... செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள். அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்!
தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்....
பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.
செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்!
+ comments + 9 comments
What u are doing so FAR?FILM almost completed and waiting for release Being in tamil film industry doing like this by you is like killing your mother.you dont dream. VIJAY IS THAMIZHAN and tamilnadu will not tolerate threats , blackmailer like you. Kaththi will become mass hit and your film will never see the day.Millions of vijay fans will not forget you for ever .
Kaththi' gets support from Seeman & Vikraman
The controversy & allegations regarding, Lyca Productions origin is slowly coming to an end in the form of support from Seeman & Director's union head, Vikraman. Both have expressed their full support to Vijay - Murugadoss movie and cleared the air, at least for the time being. Vikraman mentioned that, the makers are Tamil people only and dismissed all the baseless rumors
டேய் வந்தேறி நாய்களே.. யாரை பார்த்து தமிழ் இனத்தின் துரோகி என்று சொல்கிறீர்கள்
மானம் கெட்ட நாய்களே பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தமிழ் தவிர
பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் தான் என் தலைவன்
லட்சக்கணக்கான மக்கள் கொள்ளப்படும் போது ஓடி ஒளிந்து கொண்ட நடிகர் மத்தியில் ராஜபக்சே அரசை கண்டித்து Nagapattinam La போராட்டம் நடத்தியவர்
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எத்தனை தயாரிப்பாளர்களை வேண்டுமானாலும் கொள்ளும் மானம் கெட்ட நாய்களுக்கு மத்தியில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களை காப்பற்றியவர்
என்னை வளர்த்த தமிழ் மக்களைப் மறக்கமாட்டேன்
என்று இருக்கும் என் தலைவனை எங்கிருந்தோ பிழைக்க வந்த பண்டார நாய்களே அவனது மட ரசிகர்களே முதலில் யார் தமிழன் என்று தெரிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
மரம் விழுந்து தலை சாயும் மலை (தளபதி) சாயாது
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா
தளபதி என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.
फ़ोटो: இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.
s
கத்தி படத்தின் motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தயாரிப்பு நிறுவனம் லைக்கா என இருந்தது,முதலில் கத்தி படத்தை தயாரித்தது ஐயங்காரன் நிறுவனம் அவர்கள் தான் கத்தி படத்தை இடையில் லைக்கா நிறுவனத்திடம் கைமாற்றி விட்டனர். விஜயின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட சில விஷமிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்,அவர்கள் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்ப சொத்து என சொல்லி கத்தி திரைபடத்தை தடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் ஈழ பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள்.
1. இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் லைக்கா நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?
2. லைக்கா நிறுவனம் எந்த வகையில் ராஜபக்சேயுடன் தொடர்புடையது ? அதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? ஆதாரம் இல்லையா?
3. லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது என்றால் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பிறகு இலங்கை மீது பொருளாதார தடை விதித்த தமிழக அரசு அப்பொழுதே லைக்கா நிறுவனம் தமிழ் படங்களை தயாரிக்க தடை விதித்து இருக்கவேண்டுமே?? 2007 ஆம் ஆண்டு லைக்கா நிறுவனம் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தது.
4. தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் ஸ்பொன்செராக லைக்கா நிறுவனம் உள்ளது,அத்தொடரில் ஆடும் தமிழக வீரர்கள் விஜய் மற்றும் அஷ்வின்-ஐ தடை செய்து விடலாமா?? சென்னை அணிக்காக ஆடும் தோணி,அஷ்வின்,ஜடெஜா ஆகியோருக்கு சென்னைக்காக ஆட கூடாது என தடை விதித்து விடலாமா??
இது பற்றி சர்ச்சை வந்தவுடனே முருகதாஷ் அவர்கள் தெளிவாக அறிக்கை விடுத்தார்,லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல விஜய் ஒருபோதும் தமிழர் மனதை புண்படுத்தும் காரியங்களை செய்யமாட்டார் என தெளிவாக விளக்கமளித்தார்.இதற்க்கு பிறகும் கத்தி திரைப்படத்தை தடை செய்ய துடிக்கும் போலி தமிழ் ஈழ முகனூல் போராளிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இன அழிப்பை தடுக்க துப்பில்லாதவகள் ,கத்தியை முடக்க துடிக்கிறார்கள்.
தமிழ் ஈழ பெண்ணை திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு அரசியல் மற்றும் பணத்திற்காக வேறு பெண்ணை திருமணம் செய்த அரசியல்வாதியை விட விஜய் எந்த வகையில் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்?? ஈழ பெண்ணை திருமணம் செய்தாரே அதுதான் அவர் செய்த துரோகமா??
கத்தி படத்தை முடக்க துடிக்கும் அறிவிலிகளுக்கு உன்மையில் தமிழ் ஈழ உனர்வு இருந்தால் ஒரு படத்தை தமிழ் ஈழம் என்ற பெயரில் தடுக்க போராடாமல் தமிழ் ஈழத்திகாக போராடி இருப்பார்கள்.தமிழர்களுக்காக போராடுவது முகனூலில் ஆனால் ஒரு திரைப்படத்தை தடுக்க தெருவில் வந்து போராட போகிறார்களாம் இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்கள்.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பொழுது காங்கிரஷ் அரசுடன் சேர்ந்து அமைதி காத்து அதை மறைக்க நினைத்த கருணானிதியை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??
அப்பாவி மக்களை விடுதலை புலிகள் தவறாக பயன்படுத்துகிறது என சொல்லிய ஜெயலலிதாவை விடவா விஜய் தமிழ் ஈழ போராட்டத்திற்கு எதிரானவர்??
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே இலங்கையில் நடந்த இன படுகொலையை தடுக்கமுடியவில்லை ஆனால் தமிழ் ஈழம் பற்றி அரசியல் செய்வார்கள் அவர்களை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??
கர்னாடகாவை சார்ந்த ரஜினி ,கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஜித் திரைப்படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளியாகிறது. ஆனால் தமிழர்களான விஜய் ,கமல் படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளிவருவது இல்லை.தமிழ் நாட்டில் தமிழன் உரிமை இழந்து வாழ்ந்து வருகிறான்.அதுவும் அஜித் ஈழ தமிழர்களை கேவலமாக பேசியவர் அவர் தமிழ் நாட்டின் தலையாம். ?? கேடு கெட்டவர்கள்....
இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்களுக்கு உண்மையில் தமிழர்களுக்காக போராட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் முதலில் முகனூலில் போராடுவதை விடுத்து தெருவில் இறங்கி போராடுங்கள் அப்புரம் கத்தி படத்தை தடை செய்யலாமா வேண்டாமா என யோசிக்கலாம்..உங்கள் அரசியல்,பணம் மற்றும் விளம்பர லாபதிற்கு அல்லது விஜய்யை பிடிக்காது என்பதற்காக தமிழ் ஈழ போராட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் கேவலமாக உள்ளது.
நாங்களும் தமிழர்கள் தாண்டா...
please think and act
vijay is a tamilian supporting tamil cause
are u doing this against other state heroes and heroines
'கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் நம்மிடம் பேசினார். '' 'கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம். 1980-களில் ஈழத்தைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக இருந்து வருகிறார். தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் 'ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்? இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள்தான். இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு 'கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்'' என்றார்.
accept this and dont oppose kaththi
லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சுபாஷ்கரனுடன் சேர்ந்து லைக்கா நிறுவனத்தைத் தொடங்கியவருமான வெளிநாடுவாழ் இந்தியர் காங்லி, கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ்கரனை விட்டுப் பிரிந்து சென்றார். பிரிந்துபோன அவர், தனியாக லிபரா என்ற மொபைல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். 'இவர்தான் கத்தி படம் பற்றி நெகட்டிவ் தகவல்களை மீடியாவில் பரப்புகிறார்
neeyellam oru director
vunnai yaarukku theiriyum
karuthu sollavantha nee
oru producer kazhuthai arivaaya
vun budget i lakh
kaththi budget 75 c
why u give trouble for the fim on some pretext
Post a Comment