ரொம்ப பிஸியாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மத மாற்றம், தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை என கொஞ்ச காலம் செய்திகளில் பிரதானமாக இருந்தவர், இப்போது தான் இசையமைக்கும் படங்களுக்காக செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
100 படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இப்போது ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்' படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். சூர்யாவின் அடுத்தடுத்த இரு படங்களுக்கும் யுவன்தான் இசையமைக்கிறார்.
மேலும் இவரது இசையில் ‘தரமணி', 'இடம் பொருள் ஏவல்', ‘வை ராஜா வை', ‘வானவராயன் வல்லவராயன்', 'யட்சன்', நீயெல்லாம் நல்லா வருவடா.. போன்ற படங்களும் உருவாகிவருகின்றன.
விஷால் நடிக்கும் பூஜை மற்றும் ஆம்பள ஆகிய படங்களுக்கும் யுவன்தான் இசையமைக்கிறார்.
இந்த தமிழ்ப் படங்கள் தவிர, பாலிவுட்டில் ராஜா நட்வர்லால், தெலுங்கில் ராம்சரண் தேஜாவின் கோவிந்துடு அந்தரிவாடுலே ஆகிய படங்களுக்கும் யுவன் இசையமைத்து வருகிறார்.
Post a Comment