பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கேட்டுப் பெற்ற பீகார் அமைச்சர்!

|

விஷால் - ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பை, இயக்குநர் ஹரியுடன் கேட்டுப் பெற்றுள்ளார் பீகார் அமைச்சர் வினய் பிகாரி.

விஷால், சுருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்குகிறார். விஷால் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பீகாரில் நடக்கிறது.

பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கேட்டுப் பெற்ற பீகார் அமைச்சர்!

விஷாலின் சண்டை காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். இதற்குப் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக, அந்த மாநில அமைச்சர் வினய் பிகாரியைச் சந்தித்தனர்.

அப்போதுதான் பூஜை படத்தில் நடிக்க தனக்கும் ஒரு வாய்ப்பு தருமாறு இயக்குநர் ஹரியிடம் வினய் பிகாரி கேட்டுள்ளார்.

தான் ஏற்கனவே நிறைய போஜ்புரி படங்களில் நடித்துள்ளதாகவும் ஒரு படத்தை இயக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து பூஜை படத்தில் இடம் பெறும் ஒரு மாவட்ட கலெக்டர் வேடத்தை அவருக்குக் கொடுத்துள்ளார் ஹரி.

'அசைவ உணவு சாப்பிடுவதால்தான் கற்பழிப்பு குற்றங்கள் பெருகுகின்றன,'[ என சர்ச்சை கருத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினாரே... அந்த வினய் பிகாரிதான் இவர்! நிதீஷ்குமாரின் அமைச்சரவையில் மாநில இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

 

Post a Comment