மும்பை: பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் படத்தில் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நடிக்க உள்ளார்.
இன்டியானா ஜோன்ஸ், தி அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் உள்ளிட்ட பல பிரமாண்ட ஹாலிவுட் படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவர் தயாரிப்பில், லாஸ் ஹால்ஸ்ட்ராம் இயக்கத்தில் உருவாகும் தி ஹன்ட்ரட் பூட் ஜர்னி படத்தில் பாலிவுட் நடிகர் ஓம் புரியின் மனைவியாக நடிக்கிறார் ஜூஹி சாவ்லா. 46 வயதாகும் அவர் படத்தில் 62 வயது பெண்ணாக நடிக்கிறார்.
மேலும் ஹீரோவின் அம்மா ஜூஹி தான். 1984ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்பட்டம் வென்றவர் ஜூஹி. உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட் செல்லும் அழகி ஜூஹி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ஜூஹியின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாம். ஆனால் ஜூஹி இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் உள்ளார்.
Post a Comment