எஸ்ஆர்எம் குரூப்பில் இருந்து மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல்!

|

எஸ்ஆர்எம் குரூப்பில் இருந்து மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல்!

சென்னை: எஸ்ஆர்எம் குரூப்பிலிருந்து நாளை முதல் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல் ஒன்று ஒளிபரப்பை துவங்க உள்ளது.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவன குரூப்பிலிருந்து புதிய தலைமுறை மற்றும் புதுயுகம் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் வேந்தர் டிவி என்ற பெயரில் பொழுது போக்கு சேனல் நாளை முதல் வணிகரீதியான ஒளிபரப்பை தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த சேனல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், இனிதான் வணிக ரீதியாக ஒளிபரப்பை துவங்குகிறதாம்.

புத்தம் புது காலை என்ற பெயரில் காலை நேர பல்சுவை நிகழ்ச்சி, பாரதி கண்ணம்மா என்ற பெயரில் கோவை மண்வாசத்துடன் மெகா தொடர், சினிமா கிளைமேக்ஸ் தொடர்பான முடிவல்ல ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளன.

குஷ்பு தொகுத்து வழங்கும் டாக்-ஷோவான நினைத்தாலே இனிக்கும், திக்..திக்..திக் என்ற பெயரில் திரில் அனுபவங்களின் தொகுப்பு போன்ற நிகழ்ச்சிகளும் வேந்தர் டிவியில் களைகட்ட போகின்றன.

"சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை தருவதே வேந்தர் டிவியின் நோக்கம்" என்று அதன் எம்.டி, ரவி பச்சமுத்து கூறியுள்ளார்.

 

Post a Comment