ஹைதராபாத்: தேசியக் கொடியை தாறுமாறாகப் பயன்படுத்தி சர்ச்சயைில் சிக்கியவர்களின் வரிசையில் நடிகை மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்துள்ளார். தேசியக் கொடியை இடுப்பில் கட்டி போட்டோவிற்கு போஸ் கொடுத்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் மல்லிகா ஷெராவத்.
"டர்ட்டி பாலிட்டிக்ஸ்" என்று பெயரில் உருவாகி வரும் புதிய படமொன்றில் மல்லிகா நடித்து வருகின்றார். நாடு முழுதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்கள்தான் தற்போது புதிய சர்ச்சைக்கு வழிகோலியுள்ளன.
அப்போஸ்டர்களில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு, சுழக் விளக்குகள் உள்ள அரசு வாகனத்தின் மேல் மல்லிகா அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்று அனைத்து தரப்பினரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
இதனால் வெகுண்டெழுந்த தனகோபால் ராவ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் அடிப்படையில் மல்லிகா ஷெராவத், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரை தண்டைனைக்கு உள்ளாக்க வேண்டும். மேலும், இதுபோன்ற கீழ்த்தரமான போஸ்டர்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர், குற்றச்சாட்டு தொடர்பாக 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி, மத்திய அரசு, படத்தின் தயாரிப்பாளார், நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Post a Comment