சென்னை: சென்னையைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வடபழனியில் உள்ள ஆண்ட்ரூஸ் தெருவில் வசித்து வருபவர் சிவம் என்பவர். இவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி" போன்ற சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மும்பை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சிவம் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனாலும், சிவம் எங்கிருக்கின்றார் என்பதைக் கண்டறிய இயலவில்லை. இதையடுத்து அவர்கள் வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment