இனப்படுகொலையில் பங்கு பெறப் போகிறீர்களா? - கத்தி படத்துக்கு எதிராக மாணவர்களின் போஸ்டர்கள்!

|

சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:

இனப்படுகொலையில் பங்கு பெறப் போகிறீர்களா? - கத்தி படத்துக்கு எதிராக மாணவர்களின் போஸ்டர்கள்!

அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே...

மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா?

தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையில் நீங்களும் பங்கு பெறப் போகிறீர்களா?

உயிர் தந்த தாயும் உடன் பிறந்த சகோதரியும் உன் கண்முன்னே கற்பழிக்கப்படுவார்களேயானால்,

சிங்கள ராணுவத்தால் உன் தந்தையும் சகோதரனும் படுகொலை செய்யப்படுவார்களேயானால்,

முள்வேலி முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவது
உன் குடும்பமாக இருந்தால்..

நீ என்ன செய்வாயோ.. அதைச் செய்!

-இவ்வாறு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கூடவே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

+ comments + 8 comments

Anonymous
2 August 2014 at 16:45

PAID AGENTS AND POLITICAL REASON WITHOUT THINKING
WHEREFROM STUDENTS GOT MONEY FOR POSTERS

Anonymous
2 August 2014 at 16:47

WHAT POLITICAL PARTIES HAVE DONE SO FAR?
DO STUDENTS HAVE SOME SENSE TOA SK THEM
AFTER ALL IT IS CINEMA
TRUTH IS DIFFERENT
WHY U PLAY IN THE HANDS OF POLITICIANS

Anonymous
2 August 2014 at 16:49

DID U QUESTION POLITICAL PARTIES?
WHAT THEY AHVE DONE FOR THIS CAUSE?
THIS IS CINEMA AND IT PRODUCED BY TAMIL FRIENDS
YOU ARE HIDING TRUTH AND ACT AS PAID AGENTS

Anonymous
2 August 2014 at 16:51


மானம் கெட்ட நாய்களே பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தமிழ் தவிர
பிற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் தான் என் தலைவன்
லட்சக்கணக்கான மக்கள் கொள்ளப்படும் போது ஓடி ஒளிந்து கொண்ட நடிகர் மத்தியில் ராஜபக்சே அரசை கண்டித்து Nagapattinam La போராட்டம் நடத்தியவர்
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எத்தனை தயாரிப்பாளர்களை வேண்டுமானாலும் கொள்ளும் மானம் கெட்ட நாய்களுக்கு மத்தியில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களை காப்பற்றியவர்
என்னை வளர்த்த தமிழ் மக்களைப் மறக்கமாட்டேன்
என்று இருக்கும் என் தலைவனை எங்கிருந்தோ பிழைக்க வந்த பண்டார நாய்களே அவனது மட ரசிகர்களே முதலில் யார் தமிழன் என்று தெரிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
மரம் விழுந்து தலை சாயும் மலை (தளபதி) சாயாது
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா
தளபதி என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழும் தளபதியும்
இரு கண்கள்
அன்புடன்
தளபதி தம்பி

Anonymous
2 August 2014 at 16:52

இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.
फ़ोटो: இளையதளபதியை தமிழின துரோகி என்று சொல்லும் பட்சோந்திகளே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ் இனத்துக்கு எவனோ போடும் எச்சை சோறுக்கு ஆசைப்பட்டு ஒரு அக்மார்க் தமிழனை ஏளனம் செய்வதா. இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி திரியும் கர்நாடகாகாரன் என்ன செய்தான் தமிழ் இனத்துக்கு தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்று கர்நாடகாவில் சொத்து சேர்க்கும் அந்த மானம் கெட்டவனை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. ஆந்திராவில் பிறந்து தமிழுக்கு பஞ்சம் பிழைக்க வந்து இன்று தமிழர்களின் பணத்தை சுரண்டி தின்னும் அந்த தறுதலையை சொல்லுங்கள் தமிழின துரோகி என்று. இந்த இருவரும் தமிழர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்கின்றனர். என் தளபதி இன்றும் தமிழர்களுக்கு உதவி செய்யும் பச்சை தமிழனடா. அன்று நம் இலங்கை தமிழர்கள் தாக்கபட்டுகொண்டிருக்கும் வேளையில் நாகபட்டினத்திலும் சென்னையிலும் போராட்டமும் உண்ணாவிரதமும் இருந்து குரல் கொடுத்தவரடா என் அன்பு தளபதி. அன்று நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள் எச்சை சோறு பட்சோந்திகளே. நீங்களெல்லாம் என் தளபதியின் கால் தூசுக்குகூட சமம் இல்லாதவர்கள்.

Anonymous
2 August 2014 at 16:54

சமிபத்தில் கத்தி படத்தின் motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தயாரிப்பு நிறுவனம் லைக்கா என இருந்தது,முதலில் கத்தி படத்தை தயாரித்தது ஐயங்காரன் நிறுவனம் அவர்கள் தான் கத்தி படத்தை இடையில் லைக்கா நிறுவனத்திடம் கைமாற்றி விட்டனர். விஜயின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட சில விஷமிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்,அவர்கள் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்ப சொத்து என சொல்லி கத்தி திரைபடத்தை தடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் ஈழ பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள்.

1. இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் லைக்கா நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?

2. லைக்கா நிறுவனம் எந்த வகையில் ராஜபக்சேயுடன் தொடர்புடையது ? அதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? ஆதாரம் இல்லையா?

3. லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது என்றால் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பிறகு இலங்கை மீது பொருளாதார தடை விதித்த தமிழக அரசு அப்பொழுதே லைக்கா நிறுவனம் தமிழ் படங்களை தயாரிக்க தடை விதித்து இருக்கவேண்டுமே?? 2007 ஆம் ஆண்டு லைக்கா நிறுவனம் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தது.

4. தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் ஸ்பொன்செராக லைக்கா நிறுவனம் உள்ளது,அத்தொடரில் ஆடும் தமிழக வீரர்கள் விஜய் மற்றும் அஷ்வின்-ஐ தடை செய்து விடலாமா?? சென்னை அணிக்காக ஆடும் தோணி,அஷ்வின்,ஜடெஜா ஆகியோருக்கு சென்னைக்காக ஆட கூடாது என தடை விதித்து விடலாமா??
இது பற்றி சர்ச்சை வந்தவுடனே முருகதாஷ் அவர்கள் தெளிவாக அறிக்கை விடுத்தார்,லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல விஜய் ஒருபோதும் தமிழர் மனதை புண்படுத்தும் காரியங்களை செய்யமாட்டார் என தெளிவாக விளக்கமளித்தார்.இதற்க்கு பிறகும் கத்தி திரைப்படத்தை தடை செய்ய துடிக்கும் போலி தமிழ் ஈழ முகனூல் போராளிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இன அழிப்பை தடுக்க துப்பில்லாதவகள் ,கத்தியை முடக்க துடிக்கிறார்கள்.
தமிழ் ஈழ பெண்ணை திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு அரசியல் மற்றும் பணத்திற்காக வேறு பெண்ணை திருமணம் செய்த அரசியல்வாதியை விட விஜய் எந்த வகையில் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்?? ஈழ பெண்ணை திருமணம் செய்தாரே அதுதான் அவர் செய்த துரோகமா??
கத்தி படத்தை முடக்க துடிக்கும் அறிவிலிகளுக்கு உன்மையில் தமிழ் ஈழ உனர்வு இருந்தால் ஒரு படத்தை தமிழ் ஈழம் என்ற பெயரில் தடுக்க போராடாமல் தமிழ் ஈழத்திகாக போராடி இருப்பார்கள்.தமிழர்களுக்காக போராடுவது முகனூலில் ஆனால் ஒரு திரைப்படத்தை தடுக்க தெருவில் வந்து போராட போகிறார்களாம் இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்கள்.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பொழுது காங்கிரஷ் அரசுடன் சேர்ந்து அமைதி காத்து அதை மறைக்க நினைத்த கருணானிதியை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??
அப்பாவி மக்களை விடுதலை புலிகள் தவறாக பயன்படுத்துகிறது என சொல்லிய ஜெயலலிதாவை விடவா விஜய் தமிழ் ஈழ போராட்டத்திற்கு எதிரானவர்??
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே இலங்கையில் நடந்த இன படுகொலையை தடுக்கமுடியவில்லை ஆனால் தமிழ் ஈழம் பற்றி அரசியல் செய்வார்கள் அவர்களை விடவா விஜய் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்??

கர்னாடகாவை சார்ந்த ரஜினி ,கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஜித் திரைப்படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளியாகிறது. ஆனால் தமிழர்களான விஜய் ,கமல் படங்கள் பிரச்சினை இல்லாமல் வெளிவருவது இல்லை.தமிழ் நாட்டில் தமிழன் உரிமை இழந்து வாழ்ந்து வருகிறான்.அதுவும் அஜித் ஈழ தமிழர்களை கேவலமாக பேசியவர் அவர் தமிழ் நாட்டின் தலையாம். ?? கேடு கெட்டவர்கள்....

இந்த போலி தமிழ் ஈழ உனர்வாளர்களுக்கு உண்மையில் தமிழர்களுக்காக போராட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் முதலில் முகனூலில் போராடுவதை விடுத்து தெருவில் இறங்கி போராடுங்கள் அப்புரம் கத்தி படத்தை தடை செய்யலாமா வேண்டாமா என யோசிக்கலாம்..உங்கள் அரசியல்,பணம் மற்றும் விளம்பர லாபதிற்கு அல்லது விஜய்யை பிடிக்காது என்பதற்காக தமிழ் ஈழ போராட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் கேவலமாக உள்ளது.
நாங்களும் தமிழர்கள் தாண்டா...

Anonymous
2 August 2014 at 16:56

PASANGALA POI PADINGA
NEENGAL ENTHA POLITICAL PARTY KU JAALRA
VUNGA PARENTS ENNAPANRANGA
VUNGALUKKU VERA VELAYE ILLAYA

Anonymous
2 August 2014 at 16:58

மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? - See this is totally untrue and u cant prove this.You are playing in the hands fo someone and is acting against tamilian vijay. shame

Post a Comment