சென்னை: லீடர் நடிகரின் ஆயுதம் பெயர் கொண்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர் அமைப்புகளை சமாதானம் செய்யும் வேலையில் அரசியல்வாதியான அந்த இயக்குனர் ஈடுபட்டுள்ளாராம்.
லீடர் நடிகர் நடித்து வரும் குத்தும் ஆயுதத்தின் பெயர் கொண்ட படம் அதன் தயாரிப்பாளரால் பிரச்சனையில் சிக்கியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
படத்திற்கு மாணவர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகள் நடிகரின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டதால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் சில மாணவர் அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்து லீடர் நடிகரை சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.
படம் குத்துபடாமல் ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர் அமைப்புகளை சமாதானம் செய்யும் வேலையில் அரசியல்வாதியான அந்த 3 எழுத்து இயக்குனர் மற்றும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.
படத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் அதை எதிர்ப்பதா என்று அந்த இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Post a Comment