சென்னை: லொள்ளுசபா நிகழ்ச்சியில் நீட்டி முழக்கி பேசி தனி பேச்சுவழக்கை ஏற்படுத்தியவர் மனோகர். இன்றைய இளசுகளில் பெரும்பாலானவர்கள் மனோகர் போல பேசி அடுத்தவர்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருந்த மனோகர், பிறகு மாஞ்சா வேலு, வேலாயுதம், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிப்பில் கலந்து கட்டி அடிக்கும் மனோகர் மத்திய அரசு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிகிறார் என்பது அநேகம் பேருக்கு தெரியாது. நிறைய படங்களில் நடிப்பதற்காக வங்கிப் பணியை விடப்போவதாக கூறுகிறார் சந்தானம்.
லீவ் கிடைக்கலையே...
தற்போது சின்னத்திரை, பெரியதிரையில் ஏன் பிரேக் விட்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் வெறும் காமெடியன் இல்லங்க. நான் ஒரு மத்திய அரசு ஊழியன். கார்ப்ப ரேஷன் பேங்குல வேலை பார்க்கிறேன். அதுனால அடிக்கடி லீவ், பெர்மிஷன்னு போட முடியல.
ஜில்லாவில் நடிச்சேன்
உதயநிதி, சந்தானம் காம்பினேஷன்ல ‘நண்பேன்டா' பண்ணிகிட்டிருக்கேன். ‘ஜில்லா' படத்துல கூட நடிச்சிருந்தேன். படம் ரொம்ப நீளமா இருக்குன்னு என்னோட போர்ஷன கட் பண்ணிட்டாங்க.
20 படங்கள் ரிலீஸ் ஆகல
இன்னும் நான் நடிச்ச 20 படம் ரிலீசாகாம இருக்கு. வர்ற அக்டோபர் மாசத்தோடு பேங்க் வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரமா சினிமாவுல நடிக்கப்போறேன். இனிமே என்னைய நெறைய படங்கள்ல பாக்கலாம்.
தயங்கும் தயாரிப்பாளர்கள்
நான் பேங்குல வேலை பாக்குறதால ஒவ்வொரு தயாரிப்பாளரும் என்ன புக் பண்ண தயங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் இந்த முடிவு.
நண்பன் சந்தானம்
சந்தானம் என்னோட பெஸ்ட் பிரண்ட். இன்னைக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகனா வளந்துருக்கான். ஆனால் லொள்ளு சபாவுல இருந்தப்ப இருந்த அதே சந்தானமாதான் இன்னைக்கும் எங்கக்கூட பழகுறான் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் லொள்ளுமனோகர்.
Post a Comment