மும்பை: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா படுகோனே, இர்பான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகு' என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த அமிதாப் பச்சனுக்கு, திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் நலம் சோர்வாக காணப்பட்டார். உடனே படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர், உடனடியாக அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர்.
இந்நிலையில், தனது உடல்நலம் குறித்து ‘டுவிட்டர்' வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன், ‘அட, காய்ச்சல் ஏற்பட்டு சரிந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தான் மீண்டுவர வேண்டும் என்று தனக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்து கொண்டுள்ளார்.
Post a Comment