சென்னை: இங்கிலாந்தில் கத்தி படத்திற்கு 12ஏ சான்று கிடைத்துள்ளது. அதாவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படத்தை தனியாக பார்க்கக் கூடாது என்பது ஆகும்.
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படம் தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளா மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்திலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
இங்கிலாந்தில் மொத்தம் 70 தியேட்டர்களில் கத்தி ரிலீஸாகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சென்சார் போர்டு கத்திக்கு 12ஏ சான்று கிடைத்துள்ளது. அதாவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையின்றி தனியாக படத்தை பார்க்கக் கூடாது.
படத்தில் ஓவராக ஆக்ஷன் காட்சிகளோ, வன்முறையோ இருந்தால் அதை 12 வயதுக்குடப்பட்ட குழந்தைகள் தனியாக பார்த்தால் அவர்களின் மனதை அது பாதிக்கும் என்று கருதுகிறது இங்கிலாந்து சென்சார் போர்டு.
இங்கு கத்தி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment