தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்க.. 1995-ம் ஆண்டு வெளியான படம் இது. ஷாரூக்கான், காஜோல் நடித்திருந்தனர்.
வசூலில் புதிய சாதனைப் படைத்த இந்தப் படம், 20 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் இன்னமும் ஓடி, உலக சாதனைப் படைத்துள்ளது.
சினிமா உலக சரித்திரத்தில் தொடந்து 20 ஆண்டுகள் எந்தப் படமும் ஓடியதில்லை. இந்தப் படம் மராத்தா மந்திர் என்ற மும்பை திரையரங்கில் பகல் காட்சியாக இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது.
கூட்டம் வருகிறதா? வரத்தான் செய்கிறது. சில தினங்களில் அரங்கு நிறைந்துவிடுவதும் உண்டாம். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நேராக இந்தப் படத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.
கடந்த சில வாரங்களாக கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், படத்தைத் தூக்கிவிடலாமா என்று யோசித்துள்ளது திரையரங்க நிர்வாகம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும், படத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே தொடர்ந்து படத்தை ஓட்ட மராத்தா மந்திர் முடிவு செய்துள்ளது.
இந்த செய்தி பரவ ஆரம்பித்ததுமே, படத்துக்கு மேலும் அதிகமாக கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம்.
Post a Comment