இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இன்னும் 9 வெள்ளிக்கிழமைகளே பாக்கியுள்ளன.
இந்த இரண்டு மாத காலகட்டத்துக்குள் வெளியாவதற்குக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை... கிட்டத்தட்ட 90!
இந்தப் படங்கள் அனைத்துமோ அல்லது பாதியோ வெளியானால் கூட அது புதிய சாதனையாகிவிடும். ஆமாம்.. இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 200 படங்களைத் தாண்டிவிடும்!
2014ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, வாரா வாரம் வெளியாகும் படங்களின் சராசரி எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
கடந்த தீபாவளி வாரம் வரை தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 167. கடந்த ஆண்டு மொத்தம் 160 படங்கள் வெளியாகின. அப்படிப் பார்த்தால் 10 மாதங்களில் கடந்த ஆண்டின் எண்ணிக்கையைக் கடந்து விட்டது தமிழ்த் திரையுலகம்.
இந்த ஆண்டு முடிய இன்னும் 9 வெள்ளிக் கிழமைகளே பாக்கியுள்ளன. இந்த இடைவெளிக்குள் இன்னும் 90 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. இவற்றில் முக்கால்வாசிப் படங்கள் சென்சாரும் செய்யப்பட்டுவிட்டன.
இந்த 90 படங்களில் ரஜினியின் லிங்கா, ஷங்கரின் ஐ, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, ராகவா லாரன்ஸின் முனி 3 உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த 90 படங்களில் பாதி வெளியானால் கூட, தமிழ் சினிமா 200 ஐக் கடந்து புதிய சாதனைப் படைத்துவிடும். ஆனால் இவற்றுக்கு தியேட்டர் கிடைப்பதுதான் பெரும்பாடாக இருக்கும்.
+ comments + 1 comments
No film can beat kaththi in collection
Master blaster
Blockbuster of 2014
No film will be release upto nov 14
Balance only 6 Fridays
Post a Comment