தாரை தப்பட்டை... பாடல்கள் ரெடி... படம் எப்போ?

|

பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு 12 நாட்களில் மொத்த ட்யூன்களையும் போட்டுக் கொடுத்த இளையராஜா, இப்போது பாடல்களை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்தப் படம் இளையராஜா இசையமைக்கும் 1000வது படம். திரையுலக வரலாற்றில், தனி ஒரு இசையமைப்பாளர் 1000 படங்களுக்கு ஒரிஜினில் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்திருப்பது இதுவே முதல் முறை.

இந்த சாதனையை மிகப் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

தாரை தப்பட்டை... பாடல்கள் ரெடி... படம் எப்போ?

தாரை தப்பட்டை படம் கிராமிய நடனக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதை. இதில், சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். பாலா தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு முன்பே தொடங்கினாலும், இன்னும் பாதியைக் கூடத் தாண்டாமல் உள்ளது. படம் சிறப்பாகவும் நிஜத் தன்மையுடனும் வரவேண்டும் என்பதற்காக ஏற்கெனவே எடுத்த சில காட்சிகளை மீண்டும் எடுத்து வருகிறாராம். இதனால்தான் படப்பிடிப்பு நீள்வதாக தாரை தப்பட்டை குழுவினர் தெரிவித்தனர்.

 

Post a Comment