பி.வாசுவின் மருமகளிடம் தகாத முறையில் பேசி சீண்டிய வாலிபர் கைது

|

சென்னை: இயக்குநர் பி.வாசுவின் மருமகளான, நடிகர் சக்தியின் மனைவியிடம் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜாகிர் உசேன். 27 வயதான இவர் திரைப்படத்துறையில் உள்ளவர். வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சக்தியின் மனைவியிடம் சில்மிஷம் செய்தததற்காக தற்போது கைதாகியுள்ளார்.

பி.வாசுவின் மருமகளிடம் தகாத முறையில் பேசி சீண்டிய வாலிபர் கைது

இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்தி, பல படங்களில் நடித்துள்ளார். தனது குடும்பத்துடன் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருகிறார்.

சக்தியின் மனைவி வெளியில் போகும்போதெல்லாம் இந்த ஜாகிர் உசேன் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸாரும் ஜாகிர் உசேனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தனது வேலையைக் காட்டியுள்ளார் ஜாகிர் உசேன். இதையடுத்து சக்தியின் மனைவி அபிராமபுரம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகிர் உசேன் பின்னால் தொடர்ந்து வந்து, தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாகிர் உசேனை மீண்டும் கைது செய்தனர். இந்த சம்பவம் திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment