அஞ்சான் விஜயதசமிக்கில்லை.. தீபாவளிக்கு! - சன் டிவி திடீர் நிறுத்தம்

|

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தை ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருந்த சன் டிவி, இப்போது திடீரென நிறுத்திவிட்டது.

லிங்குசாமி - சூர்யா இணைப்பில் உருவான 'அஞ்சான்' படம் இரு மாதங்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று வெளியானது.

அஞ்சான் விஜயதசமிக்கில்லை.. தீபாவளிக்கு! - சன் டிவி திடீர் நிறுத்தம்

சமூக வலைத் தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் மற்றும் கிண்டல் கேலிகளைச் சந்தித்தது இந்தப் படம்.

இந்நிலையில், விஜயதசமி அன்று சிறப்புத் திரைப்படமாக சன் டி.வியில் 'அஞ்சான்' திரையிடப்படும் என்று விளம்பரம் வெளியானது. ஆனால், திடீரென அந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு, பிதாமகன் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பிரமாண்டமான அஞ்சான் படத்தை ஒளிபரப்பப் போகிறதாம் சன் டிவி.

 

Post a Comment