இது சிரிப்புக் கப்பல்... உதவியாளர் படத்துக்கு ஷங்கரின் பாராட்டு

|

கப்பல் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சிரித்து மகிழும் வகையில், முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக வந்துள்ளது என இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

தனது கனவுப் படமான ஐ-யின் டப்பிங் பணியில் மும்முரமாக உள்ள ஷங்கர், மீண்டும் தனது எஸ் பிக்சர்ஸ் பேனருக்கு உயிர் கொடுக்கிறார்.

இது சிரிப்புக் கப்பல்... உதவியாளர் படத்துக்கு ஷங்கரின் பாராட்டு

தன் உதவியாளர் கார்த்திக் இயக்கியுள்ள ‘கப்பல்' படத்தை எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடுகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார் ஷங்கர். கப்பல் படம் சிரிப்பு கலவரமாக வந்துள்ளது என்றும், துவக்கம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் இந்தப் பாராட்டு படத்து பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

Post a Comment