ராஸ்கல், யாரை பார்த்து நக்கல்: வாரிசு நடிகர் மீது கடுப்பில் 'லீடர்'

|

சென்னை: தனது ஆயுதம் படம் பற்றி ட்விட்டரில் கலாய்த்த அந்த வாரிசு நடிகர் மீது லீடர் கடுப்பில் உள்ளாராம்.

லீடரின் ஆயுதம் படம் படாதபாடு பட்டு ஒருவழியாக ரிலீஸானது. படம் ரிலீஸான வேகத்தில் அவ்வளவு வசூல் செய்துவிட்டது, இவ்வளவு வசூல் செய்துவிட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தின் வசூல் புதிய சாதனைகள் படைக்க உள்ளது என்று கூறப்பட்டது.

இதை பார்த்த பலரும் வசூல் பற்றி கதை கட்டுவதாகக் கூறி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் ஸ்டைல் நடிகர் நடித்த படத்தின் வசூலை முந்திவிட்டதாக கூறுவதே இந்த நடிகரின் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது என்று ஆளாளுக்கு ட்வீட் செய்தார்கள். இதை பார்த்த லீடரின் ரசிகர்கள் கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட் செய்தார்கள்.

இந்த சண்டையில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனார் அந்த வாரிசு நடிகர். அவரும் லீடரின் படத்தின் வசூல் கணக்கு பொய் என்பது போல கமெண்ட்கள் போட்டுத் தாக்கினார். வாரிசு நடிகரின் இந்த செயல் பற்றி லீடருக்கு தகவல் சென்றுள்ளது.

படம் சூப்பராக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் லீடர் வாரிசு நடிகரின் செயலை பற்றி கேட்டதும் கடுப்பாகிவிட்டாராம்.

 

+ comments + 5 comments

Anonymous
31 October 2014 at 17:59

KATHTHI WILL SURELY BREAK ALL THE COLLECTION RECORDS IN KERALA - SHIBU THAMEENS

Vijay's Kaththi is running packed houses in Kerala and by first weekend the film grossed nearly six crores in Kerala. Now the film's distributor, Sibu has issued a press statement regarding Kaththi's success in Kerala

Anonymous
31 October 2014 at 18:01

Kathi will surely cross 100 CR by Sunday
Barking dogs start bark

Anonymous
31 October 2014 at 18:20

விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசானது. தமிழ்நாடு முழுவதும் 450–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடியே 40 லட்சம் வசூலித்தது. இது சாதனையாக கருதப்பட்டது. கர்நாடகாவில் மட்டும் 102 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் 2 நாட்களில் ரூ.3½ கோடி வசூலித்தது.

நேற்று வரை ‘கத்தி’ படம் சுமார் ரூ. 90 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ.100 கோடியை வசூல் எட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் அதிக வசூல் ஈட்டிய படம் ‘கத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரஜினியின் ‘எந்திரன்’ விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ‘கத்தி’ பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கு இது 3–வது ரூ.100 கோடி வசூல் படம் ஆகும். தமிழில் ‘துப்பாக்கி’, இந்தியில் ‘ஹாலிடே’ ஆகிய படங்கள் அவருக்கு ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படங்களாக உள்ளன.

Anonymous
31 October 2014 at 18:22

Thamizhan saathanayai thamizh and igazhvathu shame

Anonymous
31 October 2014 at 18:23

Truth triumphs

Post a Comment