மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

|

விபச்சார வழக்கில் கைதாகி மீட்பு இல்லத்தில் தங்கியிருந்த நடிகை ஸ்வேதா பாசு தன் தாயுடன் இன்று வீடு திரும்புகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டார்.

மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

நடிக்க வாய்ப்பு குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், என்னைப்போல பல நடிகைகள் இப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியது இந்தியா முழுவதும் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள மீட்பு இல்லத்தில் 6 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்வேதாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் செசன்சு கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

மீட்பு இல்லத்தில் அவர் தங்க வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே அவரை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். மீட்பு இல்லம் அவரை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இன்று தன் தாயாருடன் வீட்டுக்குத் திரும்புகிறார் ஸ்வேதா பாசு. அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏற்கெனவே பிரபல இயக்குநர்கள் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment