தணிக்கை செய்த பின் தடையில்லை... கத்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

|

மதுரை: ஒரு படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தலையிட முடியாது என்று கூறி, 'கத்தி' படத்துக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது லைக்கா நிறுவனம். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக 22-ம் தேதி வெளிவருகிறது.

தணிக்கை செய்த பின் தடையில்லை... கத்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இதனிடையே, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' ஆகிய இரு படங்களும் தமிழர் உணர்வை மீறி வெளியாவதால், அவற்றுக்குத் தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின், ஒரு படத்தைத் தடை செய்ய முடியாது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

 

+ comments + 1 comments

Anonymous
14 October 2014 at 22:37

Mahesh Sundar ஒரு ஹிந்தி படம் #Happy_new_year
தமிழ் நாட்டுல ரிலீஸ்
ஆகலாமாம்.ஆனா தமிழ்
படம் #Kaththi
ஆகா கூடாதம்
MaturityLevel:
ThideerTamilFans

Post a Comment