என் பெயர்ல வந்த படமெல்லாம் ஓடுது, ஆனால் என் படம் ஓடலையே: ஹீரோ கவலை

|

சென்னை: தன் பெயரில் வந்த படம் எல்லாம் ஓடுகிறது ஆனால் தான் நடித்த படம் மட்டும் ஓட மாட்டேன் என்கிறது என்று அந்த 2 எழுத்து ஹீரோ கவலையில் உள்ளாராம்.

பெரிய தயாரிப்பாளரின் மகனான அந்த ஹீரோவுக்கு அண்மை காலமாக படங்கள் ஓடுவது இல்லை. கடந்த 2012ம் ஆண்டு அதுவும் மூன்றில் ஒரு ஹீரோவாக அவர் நடித்த தோஸ்த் படமும், கடந்த ஆண்டு அவர் மோக்கியாவுடன் கூட்டணி வைத்து நடித்த படமும் தான் அண்மையில் அவருக்கு ஓடிய படங்கள். இந்நிலையில் 2 ஆண்டுகளாக அவர் நடித்து வந்த படம் தற்போது ரிலீஸானது.

படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பியவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனது பெயரில் வந்த படம் எல்லாம் ஓடுகிறது ஆனால் தான் நடித்த படம் ஓடவில்லையே என்ற கவலையில் உள்ளாராம் ஹீரோ. பெரிய இயக்குனர்களின் படங்களாக நடித்தது தான் தனக்கு ஹிட் படமே அமையவில்லை என்று நினைத்த ஹீரோ இனி பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளாராம்.

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் தன்னால் முன்னணி ஹீரோவாக முடியவில்லை என்ற கவலை வேறு அவருக்கு.

 

Post a Comment