மூன்று படங்கள்தான் நடித்திருக்கிறார் அந்த நடிகர். பத்திரிகைகள் வேறு ஆஹா ஓஹோ என அவரைப் புகழ்ந்து, ரஜினியின் சாயல் தெரிகிறது என்றெல்லாம் ஏற்றிவிட, அவருக்கு தலை கால் புரியவில்லை.
அந்த மப்பில்தான் ஐ பட இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்தபோது அப்படி நடந்து கொண்டார் போலிருக்கிறது.
புதுப் பையன், நல்லா நடிக்கிறாரே என்று நினைத்து பல தயாரிப்பாளர்கள் அவரை அணுகி கால்ஷீட் கேட்டால், நடிகர் கூறும் பதிலைக் கேட்டு செம கடுப்போடு திரும்புகிறார்களாம்.
அதற்கு முக்கிய காரணங்கள் அவர் காட்டும் செம கெத்து, இன்னொன்று அவர் கேட்கும் ஓவர்.......... சம்பளம்.
சமீபத்தில் ஒரு புதிய தயாரிப்பாளர் பாபிசிம்ஹாவை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்திருக்கிறார்.
சிம்ஹாவோ என்ன கதை, யார் டைரக்டர் என்பதையெல்லாம் விசாரிக்காமல் 'பாஸ், இப்போ வந்த 'மதுரை ஸ்பெஷல் ட்ரிங்க்' படத்துக்கப்புறம் என்னோட ரேஞ்சே மாறிப்போச்சு, தெரியாத தயாரிப்பாளர்கள், புது டைரக்டர்கள் படங்களில் எல்லாம் நான் நடிக்கிறதில்லேன்னு முடிவு பண்ணிருக்கேன். எனக்குன்னு ஒரு சர்க்கிள் இருக்கு. அவங்களுக்கு மட்டும்தான் படம் பண்ணுவேன்.. இன்னொன்னும் அடுத்த வருஷம் வரைக்கும் தேதியில்ல.. அதுக்கப்புறம்தான் தருவேன்," என்றாராம்.
ஹீரோவா நடிக்க புக் பண்ணியிருப்பதால், சம்பளமாக ஒரு கோடி வேணும் என்பதும் கூடுதல் கண்டிஷனாம்.
இவரைப் போன்ற நடிகர்கள் எல்லாம் விதார்த்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்திருந்தார் விதார்த். இத்தனைக்கும் அந்த விழாவில் அவருக்கு யாரையுமே தெரியாது.
அப்போது அவர் சொன்னார்: "நாம சினிமாவுக்குள்ள வர்றப்போ யாரையுமே தெரியாமத்தான் போய் வாய்ப்பு கேட்கிறோம். அதேமாதிரி தான் இந்த படத்தோட டீம்லேயும் எனக்கு யாரையும் தெரியாம இருந்தாலும் நான் அவங்களை வாழ்த்த வந்திருக்கேன். இனிமே இவங்களைப் பத்தி நான் தெரிஞ்சுப்பேன்!"
யதார்த்தை புரிந்த அவர் எங்கே, புதுமுக இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் இனி கண்டுகொள்ளவே மாட்டேன் என்று என்று முடிவெடுத்திருக்கும் இந்த மூன்று பட நடிகர் எங்கே!
+ comments + 1 comments
vitharth aattam pottuadangivittaar
reason avarudaya thodar flops
Post a Comment