ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஆடம்பர ரிசார்ட்டில் நடந்த `ரேவ்` பார்ட்டியில் கலந்துகொண்டு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட நடிகைகள் போலீசில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களின் ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளில் , `ரேவ் ` பார்ட்டி என்னும் மது விருந்து கலாசாரம் அண்மைக் காலமாக பரவி வருகிறது.
இளையதலைமுறையினர் மத்தியில் இந்த விருந்து கலாச்சாரம் வேகமாக பிரபலமாகி வருகிறது. ஜோடி ஜோடியாக ஆண்களும் பெண்களும் பண்ணை வீடுகளில் வாரத்துக்கு ஒரு முறை கூடி குடித்து கும்மாளம் போடுவதே இந்த பார்ட்டியின் நோக்கம். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நலஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ள போதும் `ரேவ்`பார்ட்டிகள் நடத்தப்பட்டுதான் வருகின்றன.
ஹைதராபாத் ரிசார்ட்
இந்நிலையில், நடிகைகள் கலந்து கொள்ளும் மது விருந்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடப்பதாக ஹைதராபாத் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
சுற்றி வளைப்ப
இதையடுத்து உஷார் ஆன போலீசார் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மது விருந்து நடப்பதாக சொல்லப்பட்ட ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர். பார்ட்டி தொடங்கியதும் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
கவர்ச்சி உடையில் குத்தாட்டம்
அங்கு மது குடித்தபடி போதையில் ஆண்களும் பெண்களும் நடனம் ஆடிக் கொண்டு இருந்தார்கள். எல்லோரும் அரை குறையாக ஆபாசமாக உடை அணிந்தும் இருந்தனர்.
பிரபல நடிகைகள்
எல்லோரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 10 ஆண்களும் 10 பெண்களும் பிடிபட்டார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விருந்தில் ஆடிய இளம்பெண்கள் ஆந்திராவின் முன்னணி டி.வி. நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் என்பது தெரிய வந்துள்ளது. அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment