மும்பை: தங்கை நிஷாவின் தலை தீபாவளிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து அசத்தினாராம் அக்கா காஜல் அகர்வால்.
நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும் அக்கா வழியில் நடிகையானார். ஆனால் போட்டி நிறைந்த திரை உலகில் நிஷாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கரண் வேலச்சாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் நிஷா தலை தீபாவளியை கொண்டாடினார். தங்கையின் தலை தீபாவளி அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காஜல். இதையடுத்து தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தங்கையை அசத்திவிட்டாராம்.
காஜல் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இரண்டு இந்தி படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காஜல் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு அடங்கிவிட்டது.
அவர் தனது திருமணம் பற்றி தற்போதைக்கு யோசிப்பதாக தெரியவில்லை.
Post a Comment