”அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்” – நடிகர் விவேக்

|

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்துல் கலாம் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருபவர் நடிகர் விவேக். இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் "க்ரீன் கலாம்" திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக மரங்கள் நடுவது என்று மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, "அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போதுள்ள மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாக அப்துல் கலாம் திகழ்ந்து வருகிறார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Post a Comment