சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தி வெளியானதும் தமிழ் சினிமா உலகமே இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த செய்தி வெளியானதிலிருந்து, திரையுலகின் அனைத்து அமைப்பினரும் ஒருவருக்கொருவர் செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.
திரைப் பிரபலங்கள் பலரும் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் சந்தோஷத்தை தெரிவித்தனர்.
இந்த செய்தி வெளியானபோது நடிகர் சரத்குமார் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தி அறிந்ததும், யூனிட்டுக்கே பட்டாசு பண்டல்களை வரவழைத்து வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
'படக்குழுவினருக்கு இனிப்பு வழங்கினார். இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு தமிழகத்தின் நிரந்தர முதல்வராகத் திகழ்வார் அம்மா' என்று தெரிவித்தார் சரத்குமார்.
Post a Comment