ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

|

சென்னை: பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசியல் கட்சித்தலைவரின் திருமணத்திற்கு சென்ற நடிகர் சந்தானம் தனது பர்ஸை பறிகொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா நடிகர்களையும், திரைக் கலைஞர்களையும் என்னதான் வாட்டி எடுத்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் ஏராளமான நட்சத்திரங்களும், இயக்குநர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

ராமதாஸ் பேரன், பேத்தியின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. 29ஆம் தேதி மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பி.வாசு. விக்ரமன் நடிகர் சந்தானம், ஆகியோர் பங்கேற்றனர்.

சந்தானம் வந்த உடன் ஏக வரவேற்பு காட்டினராம். ஆனால் மேடையில்தான் மணமக்களிடம் சந்தானத்தை அறிமுகம் செய்யாமல் விட்டு விட்டனராம்.

மேடையில் இருந்த அன்புமணி ராமதாசிடம் மட்டும் பேசிவிட்டு அவசரமாக கீழே இறங்கிவிட்டாராம் சந்தானம். அப்போது கூட்டம் சந்தானத்தை மொய்க்க அவரது பாக்கெட்டுக்குள் வைத்திருந்த பர்ஸை ஆட்டையை போட்டு விட்டனராம்

பர்ஸை எடுத்த நண்பர்களே பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.. அதில் முக்கியமான கார்டுகள் இருக்கிறது அதை மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சியும் யாரும் கொடுக்கலையாம்.

அங்கிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவின் மைக் மூலமாக அறிவிப்பு செய்தும் யாரும் கொடுக்கவில்லையாம். கிடைத்தால் கொண்டுவந்து கொடுத்திருங்க என்று சொல்லிவிட்டு போனாராம் சந்தானம்.

ஆனால் இப்போது வரைக்கும் சந்தானம் கைக்கு பர்ஸ் வந்தபாடில்லையாம்.

 

Post a Comment