தாதா தாவூதின் தங்கையாவாரா “ராணி முகர்ஜி”?

|

மும்பை: நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தங்கையான ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

அந்தப் படத்தை இயக்கப் போகிறார் இயக்குனரான அபூர்வா லக்கியா.

இது அபூர்வாவின் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வந்த கனவுக் கதையாகும். இப்போதுதான் அது நனவாகப் போகிறது.

தாதா தாவூதின் தங்கையாவாரா “ராணி முகர்ஜி”?

தாவூதின் தங்கை:

ஹசீனாவின் பெயர் இந்தியாவில் ஒரு காலத்தில் யாருக்கும் தெரியாத பெயராகத்தான் இருந்தது. ஆனால் அவரது கணவர் இஸ்மாயில் பார்க்கர், 1991 ஆம் ஆண்டு அருண் காவ்லி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான் ஹசீனா யார் என்பதும், அவர் தாவூத்தின் தங்கை என்பதும் பலருக்குத் தெரிய வந்தது.

இஸ்மாயிலின் இறப்பு:

இஸ்மாயிலை சுட்டுக் கொன்றவர்களை பின்னர் தாவூத் கும்பல் வேட்டையாடியது. பிரபலமான ஜேஜே மருத்துவமனையில் வைத்து கொலையாளிகளை தாவூத் கும்பல் துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடம்பெயர்ந்த ஹசீனா:

இந்த சம்பவங்களுக்குப் பின்னர் ஹசீனா, நக்பதாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தார். அப்பகுதியின் குட்டி தாதாவாக

மாறிப் போனார். கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஹசீனா மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஹசீனாவின் வாழ்க்கை:

தற்போது இந்த ஹசீனாவின் கதையைத்தான் அபூர்வா லக்கியா திரைப்படமாக்கவுள்ளார். இப்போதைக்கு ஹசீனா என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளார். நவம்பரில் படப்பிடிப்புஆரம்பிக்கலாமாம். ராணி முகர்ஜியை, ஹசீனா பாத்திரத்தில் நடிக்க அணுகியிருக்கிறாராம்.

ராணி முகர்ஜிதான் பொருத்தம்:

இந்தப் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ஹசீனாவின் மறைவுக்கு முன்பு அவருடன் நிறைய நேரம் செலவிட்டு பல தகவல்களை சேகரித்துள்ளார் அபூர்வா. ஹசீனா பாத்திரத்திற்கு ராணி முகர்ஜிதான் பொருத்தமாக இருப்பார் என்பது அபூர்வாவின் நம்பிக்கை.

பதில் கிடைக்குமா?:

இதுவரை அபூர்வாவின் கோரிக்கைக்கு ராணி பதிலளித்தது போலத் தெரியவில்லை. விரைவில் பதில் கிடைக்க காத்துக் கொண்டிருக்கின்றார் அபூர்வா.

 

Post a Comment