மும்பை: பி.கே. படத்தின் நான்காவது போஸ்டரில் தான் தெரிவித்தபடியே அனுஷ்கா ஷர்மா டிரான்சிஸ்டருன் போஸ் கொடுத்துள்ளார்.
ஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்து வரும் இந்தி படம் பி.கே. இந்த படத்தை பற்றி தான் மக்கள் அவ்வப்போது பேசி வருகின்றனர். காரணம் படத்தின் போஸ்டர்கள். முதல் போஸ்டரில் ஆமீர் நிர்வாணமாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அந்த போஸ்டரில் அவர் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு நிர்வாணமாக நின்றார். இதையடுத்து வந்த 2 போஸ்டர்களில் ஆடையுடன் வந்தார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தானும் ஆமீரை போன்று டிரான்சிஸ்டருடன் போஸ் கொடுப்பேன் என்று அறிவித்திருந்தார்.
அவர் அறிவிப்பை பார்த்தவர்கள் ஆமீருக்கு போட்டியாக அனுஷ்காவுமா நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறார் என்று தலையில் அடித்துக் கொண்டனர். இந்நிலையில் படத்தின் 4வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அனுஷ்கா காக்கி நிற ஆடை அணிந்து டிரான்சிஸ்டருடன் போஸ் கொடுத்துள்ளார்.
பி.கே. படத்திற்கு விளம்பரம் தேட இப்படி ஆமீரும், அனுஷ்காவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Post a Comment