மும்பை: பாலிவுட் நடிகை தியா மிர்சா திருமணத்தில் நடிகர் போமன் இரானி கன்னிகாதானம் செய்து வைக்கிறாராம்.
ஜெர்மனியைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் பாலிவுட் நடிகை தியா மிர்சா. 2000ம் ஆண்டில் மிஸ் ஆசியா பசிபிக் அழகிப்பட்டம் வென்ற அவர் பாலிவுட்டில் நுழைந்தார். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத தியாவுக்கு அவரது காதலர் சாஹில் சங்காவுக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தியா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இன்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை நடக்கும் திருமணத்தில் நடிகர் போமன் இரானி கன்னிகாதானம் செய்து வைக்கிறார். அதாவது தந்தை ஸ்தானத்தில் இருக்கும் போமன் இரானி மடியில் தியா அமர மாப்பிள்ளை தாலி கட்டுவார்.
தியாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவர் போமன் இரானியை தான் தனது தந்தையை போன்று கருதுகிறார். லகே ரஹோ முன்னா பாய் படத்தில் தியாவின் தந்தையாக போமன் இரானி நடித்தார். அதில் இருந்து அவர்களின் தந்தை, மகள் உறவு ரியல் வாழ்விலும் தொடர்கிறது.
Post a Comment