விஜய்- சமந்தா நடித்த கத்தி படத்தின் ஷூட்டிங் பிரமாண்ட பாடல் காட்சியுடன் நிறைவடைந்தது.
லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் வசனக் காட்சிகள் முன்பே படமாக்கப்பட்டு விட்டன.
செல்பி புள்ள என்ற பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருந்தது. அந்தப் பாடலை மும்பையில் வைத்து மும்பை பிலிம் சிட்டியில் பிரமாண்டமாகப் படமாக்கினர்.
இந்தக் காட்சியுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. பின் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடக்கின்றன. இன்னும் இருபது நாட்களுக்குள் தீபாவளிக்கு படம் வெளியாகவிருக்கிறது.
அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்புகிறார்கள்.
Post a Comment