எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார் அந்த நபர். பெயரெல்லாம் வேண்டாம். வேறு எங்கெங்கோ வாய்ப்பு தேடினார். கோபாலபுரம் பக்கம் ஒரு ஆபீஸ் போட்டிருந்தார்.
சாலிகிராமத்தில் ஒரு இளைஞர்.. அவரும் முதல் சினிமா இயக்கும் முயற்சியில் இருந்தவர். எப்படியோ வாய்ப்புக் கிடைத்தது. வெளிநாடு வாழ் தமிழர்தான் தயாரிப்பாளர். இவர் சொன்ன கதை பிடித்ததால், உடனே சாலிகிராமத்தில் ஆபீஸ் போட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஸ்க்ரிப்ட் ஒர்க் முடிந்து ஷூட்டிங் போக வேண்டியதுதான் பாக்கி.
இந்த சூழலில் முதல் பாராவில் படித்தீர்களே, அந்த நபருக்கும், இரண்டாவது பாராவில் படித்த தயாரிப்பாளருக்கும் எப்படியோ லிங்க் உண்டாகிவிட்டது. உடனடியாக இந்த வெளிநாட்டுத் தயாரிப்பாளரை கைக்குள் போட்டுக் கொண்டார் எழுத்தாள இயக்குநர். மெல்ல மெல்ல அவரிடம் அவரது படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என அத்தனைப் பேரைப் பற்றியும் தவறாகச் சொல்லி, படத்தையே நிறுத்தும் அளவுக்கு வேலைப் பார்த்துவிட்டார்.
இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, படத்தைத் தள்ளி வைப்பதாக முதலில் சொன்ன தயாரிப்பாளர், பின்னர் படத்தையே ட்ராப் பண்ணி விட்டதாகவும், அனைவரும் வெளியேறுங்கள் என்றும் கூறிவிட்டார்.
இப்போது, திடீரென அதே தயாரிப்பாளரிடமிருந்து ஒரு பிரஸ் ரிலீஸ். அவரது பேனரில் எழுத்தாள இயக்குநர் புதுப்படம் இயக்குகிறார் என்று!
எப்படியெல்லாம் வேலை பாக்குறாங்க!
Post a Comment