கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

|

சென்னை: தமிழிலும், மலையாளத்திலும் கதாநாயகியாக வலம் வந்த நடிகை கோபிகாவுக்கு ஆஸ்திரேலியாவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியவர். மலையாளத்திலும் நடித்தவர்.

இந்நிலையில் கோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக பணியாற்றிய அகிலேஷ் என்பவருக்கும் 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி கணவருடன் சென்று இனிய இல்லறத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிகா.

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

இவர்களுக்கு எமி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அகிலேஷ் மாற்றலாகி ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். இந்த நிலையில், கோபிகா 2வது முறையாக கர்ப்பமானார்.

அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபிகாவுக்கு நேற்று காலை 10 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

 

Post a Comment