தீயில் விழுந்தது தீயவர் தீயவர் சூழ்ச்சி, தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் இன்று விடுதலைப் பெற்றார். உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனை வரவேற்று தமிழகம் முழுக்க இன்று கொட்டும் மழையிலும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா விடுதலையை வரவேற்று தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தடைகளைத் தாண்டி வெற்றியுடன் தமிழகம் திரும்பி வருகிறார். தீயில் விழுந்தது தீயவர் தீயவர் சூழ்ச்சி, தாயின் வருகையில் பொங்குது மகிழ்ச்சி. கண் கலங்கி நெஞ்சம் குமுறி அழுதுகொண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கி எழுகின்றன.
அன்று சிறை சென்று திரும்பிய அன்னை இந்திரா காந்தி அம்மையார் சீற்றத்துடன் செயல்பட்டு ஏற்றமிகு நிலையை அடைந்தார்.
அதைப் போலவே இன்று நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீரும் சிறப்பும் பெறப் போகிறார்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அற்பணித்துக் கொண்டு தமிழக மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கப் போகிறார் என்று சொல்லிக்கொண்டு, அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு என பிராத்தனை செய்கிறோம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment