சூப்பர் கண்ணா கலக்கிட்ட... மெட்ராஸ் பட இயக்குநரை பாராட்டிய ரஜினி

|

மெட்ராஸ் படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் கண்ணா சூப்பர் கலக்கிட்ட என்று அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார்

சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா, பிரியாணி என தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ள படம் ''மெட்ராஸ்''.

அட்டகத்தி ரஞ்சித்தின் இரண்டாவது படமான இதில் கார்த்தி ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்திருந்தார்.

சூப்பர் கண்ணா கலக்கிட்ட... மெட்ராஸ் பட இயக்குநரை பாராட்டிய ரஜினி

வட சென்னை ஏரியாவில், ஒரு சுவரை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு பலவிதமான கருத்துக்கள் வந்தாலும், பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெட்ராஸ் படத்தை பார்த்து கொடுத்து இருக்கும் பாராட்டு, கார்த்தி, ரஞ்சித் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெட்ராஸ் படத்தை பிரத்யேகமாக பார்த்த ரஜினி ‘சூப்பர் கண்ணா சூப்பர், கலக்கிட்ட. எப்படி கண்ணா இப்படி சூட் பண்ண' என்று இயக்குனர் ரஞ்சித்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தாராம். இந்த தகவலை இயக்குநர் ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment