லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தீபாவளி ஸ்பெஷலான கத்தியின் ட்ரைலர் நேற்று வெளியானது.
வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த ட்ரைலரைப் பார்த்துள்ளனர்.
நாளை மறுநாள் கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்- சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
படம் வெளிவர இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் எனும் முன்னோட்டக் காட்சியை நேற்று மாலை வெளியிட்டனர்.
இந்த ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் 9 லட்சம் பேர்வரை பார்த்துள்ளனர்.
'பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை வரைக்கும் கிராமத்துல இருந்து வரணும். ஆனா, ஒரு கிராமத்தான் செத்தா மூக்கை மூடிக்குவாங்களா... இப்ப வரவைக்கிறேன் பார் அத்தனை சேனல்களையும்,' என விஜய் பேசும் முத்திரை வசனம் இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது.
விஜய் ரசிகர்கள் இந்த ட்ரைலரை சமூக வலைத் தளங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.
கத்தி - டிரைலர்
Post a Comment