கொட்டும் மழையிலும் 'பூஜை'-க்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங்!

|

சென்னை: அடாத மழையையும் பொருட்படுத்தாது, தீபாவளிப் படமான விஷாலின் பூஜைக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

விஷால் - ஸ்ருதி ஹாஸன் நடிக்க, ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. தீபாவளியன்று இந்தப் படம் பிரமாண்டமாக ரிலீசாகிறது.

கொட்டும் மழையிலும் 'பூஜை'-க்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங்!

தமிழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட அரங்குகள் இந்தப் படத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. விஷால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.

இந்தப் படத்துக்கான கட்டண முன்பதிவு நேற்று தொடங்கியது. சத்யம் அரங்கில் மட்டும் இன்று ஆரம்பமானது.

சென்னையிலும் பிற பகுதிகளிலும் கடும் மழை தொடர்ந்து பெய்த போதிலும், மழையைப் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் பூஜை படத்துக்கு முன்பதிவு செய்தனர்.

படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பேச்சு பரவி வருவதால், இன்றும் நாளையும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Post a Comment