இணையதளத்தில் 'லீக்'கான கத்தி கதை: கூலாக இருக்கும் படக்குழு

|

சென்னை: இணையதளத்தில் கத்தி படத்தின் கதை கசிந்துவிட்டது என சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் டென்ஷன் ஆனாலும் படக்குழுவினர் கூலாகவே உள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். படம் ரிலீஸாக உள்ள நேரத்தில் விஜய்யை பிடிக்காதவர்கள் செய்த சதி என்று அவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.

நெட்டில் கசிந்த 'கத்தி' கதை: டென்ஷனில் ரசிகர்கள், படக்குழுவோ 'கூல்'

படத்தில் இரண்டு விஜய்யும் சகோதரர்களாம். ஒருவர் நல்லவர், மற்றொருவர் கெட்டவர். நல்ல விஜய் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உதவுகிறாராம். கெட்ட விஜய் தீவிரவாதியாம். நல்ல விஜய் வில்லன் டோடா ராயை பிடித்துக்கொடுக்க உதவுகிறாராம். வெளியே வரும் ராய் விஜய்யை பழிவாங்க நினைக்கையில் ஒரே ஜாடையில் இரண்டு பேர் இருப்பதை பார்க்கிறாராம். இதில் விந்தை என்னவென்றால் ஒரு விஜய் இருப்பது மற்றொரு விஜய்க்கு தெரியாதாம். ராய் இருந்தாலும் நீல் நிதின் முகேஷ் தான் முக்கிய வில்லனாம். இதுவே கசிந்த கதை.

இணையதளத்தில் கத்தி கதை கசிந்துவிட்டதாமே என்று விசாரித்தபோது கசிந்த கதை வேறு படத்தின் கதை வேறு. அது இணையதளத்தில் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

Post a Comment