தீபாவளிக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை. என்னுடைய பூஜை படம் வந்தே தீரும் என்று நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான விஷால் கூறியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக நடித்துள்ள படம் பூஜை. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.
பாண்டிய நாடு படத்திலிருந்தே, ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுத்தான் படத்தைத் தொடங்குகிறார் விஷால். யார் வந்தாலும் கவலையில்லை என்று கூறி ரிலீஸ் செய்து வெற்றியும் பெறுகிறார்.
அதே தன்னம்பிக்கை பூஜையிலும் தொடர்கிறது.
இந்தப் படத்தை ஆரம்பித்த போதே, தீபாவளி வெளியீடு என்று அறிவித்துவிட்டுத்தான் தொடங்கினார். அதேபோல படத்தை பக்காவாக முடித்துவிட்டார். தீபாவளி வெளியீட்டுக்கு தயாராக நிற்கிறார்.
இந்த வேளையில் விஜய் நடித்துள்ள கத்தியும், விமல், சூரி, நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.
ஆனால் அதைப் பற்றி கவலைப்படவில்லை விஷால். அறிவித்தது அறிவித்ததுதான்... நிச்சயம் தீபாவளிக்கு பூஜை ரிலீஸாகும் என்கிறார்.
இந்த உறுதிக்கும் திட்டமிடலுக்கும் வெற்றி நிச்சயம்!
Post a Comment