'கத்தி'யை எதிர்ப்பதை விட்டுட்டு வேறு வேலை இருந்தா பாருங்கய்யா: குஷ்பு

|

சென்னை: கத்தி படத்தை எரித்து போராட்டம் நடத்துபவர்கள் வேறு வேலையை பார்க்குமாறு நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கத்தி படத்தின் பெயரை தெரிவிக்காவிட்டாலும் அவர் அதை தான் குறிப்பிடுகிறார்.

விஜய் நடித்துள்ள கத்தி படத்தை தயாரித்துள்ள சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒருவருக்கு நெருக்கமானவர் தயாரித்த படம் என்பதால் கத்திக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பிரச்சனையை தவிர்க்க பட விளம்பரங்களில் இருந்து சுபாஷ்கரன் மற்றும் அவரின் லைகா நிறுவன பெயரை நீக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு முறையும் ஒரு படம் ரிலீஸாகும்போது சில அமைப்புகள் அதை எதிர்க்கின்றன. அவர்கள் இவ்வாறு செய்வதே அவர்களை பற்றி பிறர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான். இல்லை என்றால் அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment