தீபாவளி ரேஸில் ஜெயம் ரவியின் பூலோகம்.. கத்திக்கு தியேட்டர்கள் கிடைக்குமா?

|

'ஜெயம்' ரவி நாயகனாக நடித்துள்ள 'பூலோகம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனால் விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் ஜெயம் ரவியின் பூலோகம்.. கத்திக்கு தியேட்டர்கள் கிடைக்குமா?

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'ஜெயம்' ரவி, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பூலோகம்'. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் கிருஷணன் இயக்கியுள்ளார். ஜனநாதன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார்.

விக்ரம் நடித்த ஐ படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக முதலில் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருந்தது. ஆனால் இப்போது ஐ படத்தை நவம்பருக்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.

பூலோகம் படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கே ஐ படத்தைத் தரப் போவதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் நிபந்தனை விதித்துள்ளதால், விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கியுள்ளார்களாம்.

ஏற்கெனவே தீபாவளி ரேஸில் முந்திக் கொண்டு வெளியாகிறது விஷாலின் பூஜை. அந்தப் படத்துக்கு 350- அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அரங்குகளில்தான் பூலோகமும் கத்தியும் வெளியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment