மக்கள் முதல்வரின் கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தனை

|

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தினர் பிரார்த்தனை செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நளினி தலைமையிலான அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மக்கள் முதல்வரின் கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தனை

வெற்றி பெற்ற அணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மக்களின் நலன் காக்கும் மக்களின் முதல்வர் சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து, மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்வது திண்ணம்.

பெற்ற தாய்க்கு மேலாக, தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க உழைக்கும் மக்கள் முதல்வரின் கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்திக்கிறது.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

Post a Comment