சென்னை: சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட முன்னாள் கவர்ச்சி நடிகையும், மறைந்த ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா கண்ணீர் விட்டு அழுதபடி கோபமாக பேட்டி கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் பாடிகார்டாக இருந்தவர் ஜஸ்டின். ஸ்டண்ட் நடிகரான இவர் பல படங்களில் எம்ஜிஆருடன் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஜஸ்டினின் மகள்தான் பபிதா. இவர் அதிரடியான கவர்ச்சியான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்.
இப்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். உண்ணாவிரதப் பகுதியில் ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது (தேம்பியபடி பேசினார்). அம்மா இரும்புப் பெண்மணி. அப்படிப்பட்ட இரும்புப் பெண்மணியை சிறையில் போட்டு அடைத்து சித்திரவதை செய்கிறார்கள்.
இதைப் பார்த்து தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.
புரட்சித் தலைவி அம்மா, சிங்க நடை போட்டு சிகரத்தை எட்டி மீண்டும் வலம் வருவார்கள். நிச்சயம் மீண்டும் வருவார். பாரதப் பிரதமராக உயர்ந்து காட்டுவார். அவருக்காக உயிரையும் கொடுக்க பலர் காத்துக் கொண்டுள்ளனர். அப்படி உயிரைக் கொடுக்க முன்வருபவர்களில் யார் முதலாவதாக இருப்பார் என்றால் அது நானாகத்தான் இருப்பேன் என்றார் பபிதா.
Post a Comment