லிங்கா படத்துக்காக ரஜினிகாந்த் தன் குழுவினருடன் ஸ்காட்லாந்து வருவதை அறிந்து அந்நாட்டு சுற்றுலாத்துறை மிகவும் உற்சாகமாகியுள்ளதாம்.
கிரேட் பிரிட்டன் எனப்படும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கம் ஸ்காட்லாந்து. எலிசபெத் மகாராணிதான் இந்த நாட்டுக்கும் தலைவர். இந்த நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களுள் ஒன்று சுற்றுலா.
இந்தப் பகுதியில் அதிக அளவு பாலிவுட் படங்கள்தான் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் தென்னிந்திய சினிமா அவ்வளவாக எட்டிப் பார்க்காத தேசம் இது.
இங்குதான் ரஜினி - அனுஷ்கா நடிக்கும் லிங்காவின் டூயட் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது.
இந்த செய்தி அறிந்ததும், லிங்கா குழுவுக்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறி வரவேற்றுள்ளது ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை.
'ரஜினி மிகப பெரிய நடிகர், அவரது படத்தின் படப்பிடிப்பு இங்கு நிகழ்வதன் மூலம் இந்தியாவில் உள்ள உயர்மட்ட சுற்றுலா பயணிகளும் ஸ்காட்லாந்துக்கு அதிகம் வருவார்கள்' என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment