சென்னை: சூது கவ்வும் திரைப்பட மெகா வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் நளன் குமாரசாமி அதன் இரண்டாம் பாகமாக, 'கை நீளம்' என்ற பெயரில் படமெடுக்க உள்ளார். ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம்தேதி இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கிறது.
விஜய்சேதுபதி, கருணா உள்ளிட்ட பலர் நடித்த சூது கவ்வும் திரைப்படத்தை நளன் குமாரசாமி இயக்கியிருந்தார். வித்தியாசமான ஜானரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து நளன் தற்போது 'கை நீளம்' என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இது, சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கப்போகிறது என்று நளன் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து, சூது கவ்வும் படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்க நளன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம்தேதி, 'கை நீளம்' திரைப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத் தொகுப்பை கவனித்து கொள்கிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.
Post a Comment