கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி! விஜய் பாத்திரத்தில் பவன் கல்யாண்?

|

சென்னை: தமிழகத்தில் கத்தி திரைப்படம் அடைந்துள்ள வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் அதை ரீமேக் செய்யும் உரிமைக்காக தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளையதளபதி விஜய், சமந்தா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் கத்தி. தென் இந்திய மொழி படங்களின் அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் முறியடித்து கத்தி மொத்தம் ரூ.23.80 கோடி வசூலித்துள்ளது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி! விஜய் பாத்திரத்தில் பவன் கல்யாண்?

எனவே அதன் ரீமேக் உரிமைக்காக தயாரிப்பாளர்கள் நடுவே போட்டா போட்டி நிலவுகிறது. "தெலுங்கில் கத்தி திரைப்படத்தை ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

அவ்வாறு ரீமேக் செய்தால் விஜய் கதாப்பாத்திலத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரம் கத்தியின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் யாருக்கும் இதுவரை விற்பனை செய்யவில்லை" என்று கத்தி திரைப்பட தயாரிப்பாளருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், ரீமேக்கிற்கு பதிலாக, அப்படியே தெலுங்கில் டப்பிங் மூலமாக ரிலீஸ் ஆவதையே படத்தின் நாயகன் விஜய் விரும்புவதாக தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

 

Post a Comment