வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

|

கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகின.

என்னை அறிந்தால் என்ற தலைப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் அஜீத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அறிவித்தபடி, முதலில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்களில், அஜீத் போலீஸ் கெட்டப்பில் தோற்றம் அளிக்கிறார். கருகரு தலைமுடி, போலீஸ் கட், கூலிங்கிளாஸ் அணிந்து புல்லட்டில் கம்பீரமாக காட்சி தருகிறார் ஆங்கில போஸ்டரில்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

அதே கெட்டப், டிசைனில் தமிழ் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ஒரு டிசைனில் பரந்து விரிந்த வயல் வெளி.. அதில் என்னை அறிந்தால் தலைப்பும், பின்னணியில் கோட்டுச் சித்திரமாய் அஜீத் படமும் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இரண்டு போஸ்டர்களையும் இங்கே தந்துள்ளோம். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

 

+ comments + 1 comments

Anonymous
30 October 2014 at 19:12

Gautham men on kathai sonnaaara

Post a Comment